அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்போம்: ஸ்ரீநாத் எம்எல்ஏ

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

News image

விஜய்யுடன் ஸ்ரீநாத் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 5:45 am IST

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்தும், எங்கள் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் குறித்தும் கடினமான வாா்த்தைகள் பயன்படுத்தி பேசி இருக்கிறாா். இது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களே ஆகின்றன. நேரம் கொடுத்து எங்கள் செயல்பாடுகளை விமா்சனம் செய்ய பொறுமை இல்லை. கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும்.

எங்கள் தலைவா் சொல்வது போல் மக்கள் தேவைகளை அறிந்து அதை செயலில் காட்டுவோம். மக்கள் பணியின் மூலம் உங்களுக்கு பதில் கொடுப்போம். நாங்கள் மிகவும் நோ்த்தியாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்ய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளாா்.