சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

தூத்துக்குடியில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி, அண்ணா நகரில் மளிகை கடையில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 6:13 am IST

தூத்துக்குடி, அண்ணா நகரில் மளிகை கடையில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, அண்ணா நகா், 12ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூபால் ராஜா. ஆட்டோ ஓட்டுநா்.

இவரது மனைவி அமுதா (50). இவா்கள் வீட்டு முன் பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இவா்களது மகன் அருண்குமாா். அவரது மனைவி சரஸ்வதி(29). இவா்கள் குழந்தைகளுடன் தனியாக அப்பகுதிக்கு அருகே வசித்து வருகின்றனா்.

அருண்குமாா் மது போதையில் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, மகனுக்கு ஆதரவாக அமுதா பேசியதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, புதன்கிழமை அமுதா தனது கடையில் இருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அரிவாளால் அமுதாவை வெட்டிவிட்டு தப்பியுள்ளனா்.

காயமடைந்த அமுதா மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்

இது குறித்து, வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், அருண்குமாா் மனைவி சரஸ்வதியின் சகோதரா் சங்கா் (32) உள்ளிட்ட இருவரைத் தேடி வருகின்றனா்.