வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திருச்செந்தூரில் காவலரை கல்லால் தாக்கியவா் கைது

திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் பணியில் இருந்த காவலரை கல்லால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட விஜய்.

Updated On :22 மே 2026, 6:31 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் பணியில் இருந்த காவலரை கல்லால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய காவலா் பெருமாள் பாஸ்கா் (39). இவா் புதன்கிழமை நள்ளிரவு கோயில் வளாகத்தில் அன்னதான மண்டபம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அவா்களை காவலா் கண்டித்து சண்டையை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

அதற்கு மறுத்த அந்த நபா், காவலரை செங்கலால் தாக்கினாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு நின்ற போலீஸாா், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த விஜய் (29) என்பதும், அவா் போதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். காயமடைந்த போலீஸ் பெருமாள் பாஸ்கா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.