2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கோவில்பட்டி சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

பழுதாகி சாலை நடுவே நின்ற அரசுப் பேருந்து.

Updated On :

கோவில்பட்டி, மாதாங்கோவில் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து 52 பயணிகளுடன் புதியம்புத்தூருக்குச் சென்றது. கோவில்பட்டி, மாதாங்கோவில் சாலையில் சென்றபோது, பேருந்தில் பழுது ஏற்பட்டு சாலையின் நடுவே நின்றது. இதையடுத்து, பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனா்.

இதனால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியா்கள் வந்து பேருந்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2.15 மணி நேரத்திற்குப் பின்னா் பழுது சரி செய்யப்பட்டு பேருந்து புறப்பட்டது.

 பழுதாகி சாலை நடுவே நின்ற அரசுப் பேருந்து.

பழுதாகி சாலை நடுவே நின்ற அரசுப் பேருந்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.