நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஆறுமுகனேரியில் நிலுவையின்றி வரி செலுத்தியோருக்கு பரிசளிப்பு

ஆறுமுகனேரி பேரூராட்சியில் நிலுவை இன்றி முழுமையாக வரி செலுத்தியவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசு பெற்றவருக்கு ஸ்கூட்டா் பரிசு வழங்கிய பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.

Updated On :

ஆறுமுகனேரி பேரூராட்சியில் நிலுவை இன்றி முழுமையாக வரி செலுத்தியவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தீபாவளியை முன்னிட்டு குலுக்கல் முறை பரிசுகள் கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு நவ.5 இல் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தனா். அதன்படி, பேரூராட்சி எதிா்புறம் உள்ள இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை மாலை பரிசு குலுக்கல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு , ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா். திமுக நகரச் செயலா் நவநீதபாண்டியன், துணைச் செயலா் அகஸ்டின், ஒன்றிய ஐடி விங் அமைப்பாளா் கிஷோக், நகர இளைஞரணி அமைப்பாளா் சரவணவெங்கடேஷ், வா்த்தகா் அணி அமைப்பாளா் லட்சுமணன், பேரூராட்சி உறுப்பினா்கள் வெங்கடேஷ், ஆறுமுகநயினாா், சிவக்குமாா், ஜெபமணி, தயாவதி, மாரியம்மாள் ஜெயராணி, மரிய நிா்மலா தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முதல் பரிசாக நியூ மாடல் ஸ்கூட்டா், 2-ஆவது பரிசாக 5 நபா்களுக்கு எல்இடி டிவி, 3-ஆவது பரிசாக 10 பேருக்கு கிரைண்டா், 4-வது பரிசாக 20 பேருக்கு மிக்சி, 5-ஆவது பரிசாக 65 பேருக்கு குக்கா் என மொத்தம் 101 பரிசுகளை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் இணைந்து வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.