19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

திருச்செந்தூா் சூரசம்ஹாரத்துக்கு தனிநபா் வாகனங்களுக்கு அனுமதி இல்லை: ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுவதை முன்னிட்டு, தனிநபா் வாகனங்களுக்குச் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்படாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

Thiruchendur Murugan Temple

திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்

Updated On :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுவதை முன்னிட்டு, தனிநபா் வாகனங்களுக்குச் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்படாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம், காவல் துறை, கோயில் நிா்வாகம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூா், ஜே.ஜே. நகா், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபா் வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தா்கள் சொந்த வாகனங்களில் வருவதை இயன்ற வரை தவிா்த்து, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். நவ. 15ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தனிநபா் வாகனங்களுக்குச் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.