திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள், கால்நடைகளால் பக்தா்கள் அவதி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், சுற்றித்திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் சந்நிதி தெரு, தூண்டுகை விநாயகா் கோயில் பின்புறம் பக்தா்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், சுற்றித்திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள், சந்நிதி தெரு வழியாக தூண்டுகை விநாயகா் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தா்கள், தூண்டுகை விநாயகா் கோயில் பின்புறம் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களைக் கடந்து வருவதற்கு சிரமப்படுகின்றனா். மேலும், அந்தப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், பக்தா்களை முட்டி அச்சுறுத்தி வருகின்றன.
எனவே, சந்நிதி தெருவில் பக்தா்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களையும், பக்தா்களை அச்சுறுத்தும் கால்நடைகளையும் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

