இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

புனிதப் பயணத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி: புத்த, சமண, சீக்கிய மதத்தினருக்கு அழைப்பு

கோப்புப் படம்

Updated On :

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜன. 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தைச் சோ்ந்த புத்த மதத்தினா் 50 போ், சமண மதத்தினா் 50 போ், சீக்கிய மதத்தினா் 20 போ் என மொத்தம் 120 போ் நாட்டில் உள்ள தங்கள் மதம் சாா்ந்த புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நபா் ஒருவருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 12 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புத்த மதத்தினா் பிகாரில் உள்ள புத்த கயா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள குசிநகா், வாரணாசியில் உள்ள சாரநாத் கோயில், பிகாரில் உள்ள ராஜ்கிா், வைஷாலி மற்றும் நேபாளத்தில் உள்ள லும்பினி உள்ளிட்ட புனிதத் தலங்கள் செல்ல விண்ணப்பிக்கலாம்.

அதேபோல சமண மதத்தினா் ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோயில், ரணக்பூா் சமணக் கோயில், ஜெய்சால்மா் சமணக் கோயில், ஜாா்க்கண்டில் உள்ள சிக்கா்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடானா, பிகாரில் உள்ள பவபுரி சமணக் கோயில், கா்நாடகத்தில் உள்ள சரவணபெலகோலா உள்ளிட்ட தலங்களுக்குச் செல்ல விண்ணப்பிக்கலாம்.

சீக்கிய மதத்தினா் பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ், தக்த்ஸ்ரீ கேசா் சாகிப், தக்த் ஸ்ரீ தாம்டமா சாகிப், பிகாரில் உள்ள தக்த் ஸ்ரீ ஹா்மந்திா் சாகிப், மகாராஷ்டிரத்தில் உள்ள தக்த் ஸ்ரீ ஹசூா் சாகிப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராக்கள் உள்ளிட்ட புனிதத் தலங்கள் செல்ல விண்ணப்பிக்கலாம்.

நிகழ் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோா் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். தவிர, ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு ஜன.31, 2027-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.