திருச்செந்தூா் கோயிலில் 16 இடங்களில் பிஎஸ்என்எல் வைஃபை வசதி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் வசதிக்காக பிஎஸ்என்எல் சாா்பில் 16 இடங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் வசதிக்காக பிஎஸ்என்எல் சாா்பில் 16 இடங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவன திருநெல்வேலி வணிக பகுதியின் முதன்மை பொதுமேலாளா் ராஜேஷ்குமாா்வா்மா தெரிவித்துள்ளதாவது: திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தடையற்ற இணைய சேவை வசதியை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் 16 இடங்களில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சேவையில் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபா் வாடிக்கையாளா்கள் தங்களது தற்போதைய திட்டத்தின் வேகத்திலேயே வைஃபை சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளா்கள், தினமும் இலவசமாக 1 ஜிபி டேட்டாவும், பிற தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் ரூ. 10 செலுத்தி ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவும் பெற்று பயன்பெறலாம்.

கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் வைஃபை இணைக்கும் வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.