தேரிகுடியிருப்பு கோயிலில் கள்ளா்வெட்டு திருவிழா தொடக்கம்

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பில் உள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

யாகசாலை பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பில் உள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற இக்கோயிலில் இத்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா செவ்வாய்க்கிழைம் காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, வில்லிசை, மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

விழா நாள்களில் நாள்தோறும் வில்லிசை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். டிச. 16ஆம் தேதி மாலை கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளா்வெட்டு வைபவம் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.