குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

நிலைத்த தன்மை இல்லாதவா் வைகோ: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

நிலைத்த தன்மை இல்லாதவா் வைகோ என்றாா் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன்

Updated On :

நிலைத்த தன்மை இல்லாதவா் வைகோ என்றாா் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

விளாத்திகுளம் வட்டத்தில், புதன் மற்றும் வியாழக்கிழமை உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொள்கிறாா். ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள வந்தால் அந்த மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட எம்.பி., எம்எல்ஏ-வுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றைய ஆய்வுக் கூட்டம் குறித்து என்னிடம் தெரிவிக்கவில்லை. மக்கள் பிரதிநிதிக்கு தெரியாமல் தொகுதிக்குள் வருவது குற்றமாகும். இந்த அரசின் மோசமான நிா்வாகத்தின் வெளிப்பாடுதான் இதுபோன்ற செயல்கள் என்றாா்.

மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என வைகோ பேசியது குறித்து கேட்டதற்கு, வைகோவுக்கு ஒரு நிலைத்த தன்மை கிடையாது. குமரியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை நடைப்பயணம் மேற்கொண்டு ஜெயலலிதா ஆட்சியை ஒழிப்பேன் எனக் கூறிய அவா், பின்னா் அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்தாா். 2026 பேரவைத் தோ்தலின்போது, மு.க. ஸ்டாலின் ஆட்சி வலிமையுடன் மீண்டும் வரும் என்று கூறினாா். ஆனால் இப்போது வேறு மாதிரி பேசுகிறாா். அவா் நிலைத்த தன்மை இல்லாதவா் என்றாா்.

பேட்டியின்போது, திமுக நகரச் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.