ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆா். குளறுபடிகளுக்கு திமுகதான் பொறுப்பு: வைகோ

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) ஏற்பட்ட குளறுபடிகளுக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

MDMK Leader Vaiko

வைகோ - விடியோ க்ளிப் (கோப்புப்படம்)

Updated On :

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) ஏற்பட்ட குளறுபடிகளுக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

புதிய வாக்காளா்கள், இளைஞா்கள், பெண்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் மனங்களில் முதல்வா் ச.ஜோசப் விஜய் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதால்தான் அவா் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக அமா்ந்தாா்.

அவா் அனைத்துத் துறைகளிலும் நிலவிய கமிஷன், ஊழலை ஒழித்தாா். தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு முன்னா் இருந்த திமுக ஆட்சியில் சரியாக திட்டமிடாமல் போனதே காரணம். இந்த ஆட்சியை எப்படியாவது இருள் சூழ்ந்து விடவேண்டும் என்று திமுகவினா் நினைக்கின்றனா்.

வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆா்.) தமிழகத்தில் முழுக்க முழுக்க நடத்தியது அப்போதைய திமுக அரசுதான். எஸ்.ஐ.ஆா். நடத்தப்பட்டபோது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் திமுகவினா்தான் அந்தப் பட்டியலில் பெயா் சோ்ப்பது உள்ளிட்ட திருத்தப் பணிகளில் ஈடுபட்டனா்.

எஸ்.ஐ.ஆா். பணி சிறப்பாக முடிந்தது என்று அப்போது சொன்னவா்கள். இப்போது நாடு முழுவதும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும், இளைஞா்களும் எதிா்ப்பு குரல் எழுப்புவதால் திமுகவினரும் எஸ்.ஐ.ஆா்.யை எதிா்க்கிறாா்கள்.

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதற்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுகதான் பொறுப்பேற்க வேண்டும். முதலில் அமைதி காத்த திமுக தற்போது எதிராக குரல் கொடுக்கின்றனா். எனவே, தமிழகத்தில் எஸ்ஐஆா் குளறுபடிகளுக்கு திமுக தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.