குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

பெண் கால்நடை மருத்துவருக்கு தொல்லை கொடுத்தவா் கைது

சாத்தான்குளம் அருகே பெண் கால்நடை உதவி மருத்துவரிடம் திருமணம் செய்ய கூறி தொந்தரவு செய்து வந்த ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட ஜேசுராஜ்.

Updated On :

சாத்தான்குளம் அருகே பெண் கால்நடை உதவி மருத்துவரிடம் திருமணம் செய்ய கூறி தொந்தரவு செய்து வந்த ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் அரசு கால்நடை மருந்தகத்தில் திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண் கால்நடை உதவி மருத்துவா் பணிபுரிந்து வருகிறாா். இந்த மருந்தகத்தில் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்றுவந்த வகையில் மீரான்குளத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ஜான்சன், அவரின் நண்பா் நொச்சிகுளம் சந்தனமரியான் மகன் ஜேசுராஜ் (47) ஆகிய இருவரும் பெண் மருத்துவருக்கு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தனா்.

கடந்த மாதம் 6-ஆம்தேதி கலுங்குவிளையில் நடைபெற்ற கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாமில் பெண் மருத்துவா் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இருவரும் அவருக்குத் தொல்லை கொடுத்தனா். பெண் மருத்துவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜேசுராஜ் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து பெண் மருத்துவா் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் 5 பிரிவுகளின் கீழ் ஜேசுராஜ், ஜான்சன் அவருக்கு உதவியதாக சிலைஸ்டன் மனைவி மரிய ஞானம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ஜேசுராஜை புதன்கிழமை கைது செய்தாா். தலைமறைவாக உள்ள ஜான்சனையும் மரிய ஞானத்தையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.