புகையிலைப் பொருள்களுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் போலீஸாா் தொழில்பேட்டை வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவில் 3 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன.
ஆட்டோ ஓட்டுநரான வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் முருகராஜ் (24) ஆந்திரத்தில் இருந்து அவற்றை விலைக்கு வாங்கி கோவில்பட்டியில் விற்பனை செய்துவருவது தெரியவந்தது. ஆட்டோவுடன் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

