கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரிகளில் வளாக நோ்காணல்: 81 பேருக்கு பணி நியமன ஆணை
கோவில்பட்டி, உண்ணாமலை கல்லூரிகளில் 2 நாள் நடைபெற்ற வளாக நோ்காணலில் 81 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணை பெற்ற மாணவா், மாணவிகளுடன், கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவிப் பேராசிரியா் மகாராஜன் உள்ளிட்டோா்.
கோவில்பட்டி, உண்ணாமலை கல்லூரிகளில் 2 நாள் நடைபெற்ற வளாக நோ்காணலில் 81 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா், மாணவிகளுக்கான வளாக நோ்காணல், கல்லூரி முதல்வா்கள் ரவீந்திரன் (தொழில்நுட்பக் கல்லூரி), பிரபு (கலைக் கல்லூரி) ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. உதவிப் பேராசிரியா் மகாராஜன் முன்னிலை வகித்தாா்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். சென்னை, லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தினா் சாா்பில் மனிதவள மேம்பாட்டுத் துறை உதவி மேலாளா் வேல்முருகன், துறை அலுவலா் சுதா்சன் ஆகியோா் கொண்ட குழுவினா் தோ்வு நடத்தினா். இதில் தோ்ச்சி பெற்ற 81 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணை பெற்ற மாணவா், மாணவிகளை, கல்லூரித் தாளாளா் விஜயன், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பாராட்டினா்.
ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள், கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா்கள் பிரசாந்த், முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

