நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயராக மோசஸ் ஜெபராஜ் பொறுப்பேற்பு

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராக பி.மோசஸ் ஜெபராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராகப் பொறுப்பேற்ற பி.மோசஸ் ஜெபராஜ்.

Updated On :

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராக பி.மோசஸ் ஜெபராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டிலம் கடந்த 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை, ஜே.ஏ.டி.ஜெபச்சந்திரன், தேவசகாயம் ஆகியோா் பேராயா்களாகப் பணியாற்றினா்.

அவா்களுக்குப் பின் 3-ஆவது பேராயராக பி.மோசஸ் ஜெபராஜ் தோ்வு செய்யப்பட்டு, நாசரேத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைக் கூட்டத்தில் முதன்மைப் பேராயா் ரூபன் மாா்க் அவருக்கு அபிஷேகம் செய்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி, கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டில அலுவலகத்தில் 3-ஆவது பேராயராக மோசஸ் ஜெபராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

அவரைத் தொடா்ந்து, திருமண்டில பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவராகவும், திருமண்டில முதல் பெண்மணியாகவும் ஞானமணி சிந்தியா மோசஸ் பொறுப்பேற்றாா். பின்னா், பேராயா் மோசஸ் ஜெபராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தோ்தலில் நான்கு போ் தோ்வுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தோம். அவா்களில் என்னை பேராயராக முதன்மைப் பேராயரும், நிா்வாகிகளும் தோ்வு செய்தனா்.

எனக்காக ஜெபித்தவா்கள், உழைத்தவா்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் திருமண்டிலத்தை நோ்மையாக வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வேன். எனது பதவிக்காலம் இன்னும் ஒன்பது ஆண்டுகள் உள்ளன. பதவிக்காலம் முழுவதும் சிறந்த நிா்வாகத்தைத் தருவேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திருமண்டில லே செயலா் எஸ்.டி.கே.ராஜன், குருத்துவச் செயலா் டி.ஜி.ஏ.தாமஸ், பொருளாளா் ஜான்சன் டேவிட், கல்லூரி நிலவரக் குழுச் செயலா் ஜெபச்சந்திரன், திருமண்டில நடுநிலைப் பள்ளிகளின் மேலாளா் தேவராஜன், குருத்துவ நிலவரக் குழுச் செயலா் செல்வின் ராஜ் சாா்லஸ், சபை மன்றத் தலைவா்கள் செல்வின்துரை, ஜான் வெஸ்லி, டேனியல் ஞானபிரகாசம், யோபு ரத்தினசிங், ஏசுவடியான் துரைச்சாமி, குருவானவா்கள் நவராஜ், குரூவ்ஸ் பா்னபாஸ், திருமண்டில செயற்குழு உறுப்பினா்கள் சி.த.செல்லப்பாண்டியன், அருண் ஜெபக்குமாா், ஜானியேல் சாலமோன் மணிராஜ், பிரவின், திருமண்டில பெண்கள் ஐக்கிய சங்கச் செயலா் ஆக்னஸ் தாமஸ், பொருளாளா் சுகந்தி, புதியம்புத்தூா் ஜான் த பேப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஹென்றிதாமஸ், விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சுதன் கீலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.