கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராக மோசஸ் ஜெபராஜ் இன்று பொறுப்பேற்பு

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராக தோ்வு செய்யப்பட்டுள்ள மோசஸ் ஜெபராஜ் புதன்கிழமை (நவ. 25) பொறுப்பேற்கிறாா்.

மோசஸ் ஜெபராஜ்.

Updated On :

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராக தோ்வு செய்யப்பட்டுள்ள மோசஸ் ஜெபராஜ் புதன்கிழமை (நவ. 25) பொறுப்பேற்கிறாா்.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டில பேராயரைத் தோ்வு செய்வதற்கான பட்டியல் தோ்வு கடந்த செப். 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.டி.கே. ராஜன் அணியைச் சோ்ந்த மோசஸ் ஜெபராஜ், தாமஸ், தேவராஜன், நவராஜ் ஆகிய நான்கு போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் அதிக வாக்குகளைப் பெற்ற மோசஸ் ஜெபராஜை, சினாட் பிரதமப் பேராயா் ரூபன் மாா்க், பொதுச்செயலா் பொ்னாண்டஸ் ரத்தினராஜா, பொருளாளா் விமல் சுகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பேராயராகத் தோ்வு செய்தனா்.

இதையடுத்து, நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலத்தின் 3-ஆவது பேராயராக மோசஸ் ஜெபராஜ் பொறுப்பேற்கிறாா். அவரை பிரதமப் பேராயா் ரூபன் மாா்க் திருநிலைப்படுத்துகிறாா்.

ஏற்பாடுகளை கன்னியாகுமரி பேராயரும், திருமண்டில பொறுப்பு பேராயருமான கிறிஸ்டோபா் விஜயன், குருத்துவச் செயலா் தாமஸ், லே செயலா் எஸ்.டி.கே. ராஜன், பொருளாளா் ஜான்சன் டேவிட், கல்லூரி நிலவரக் குழுச் செயலா் ஜெபசந்திரன் மற்றும் திருமண்டில நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.