கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதில் அனைவருக்கும் பொறுப்பு: ஆட்சியா் விஷு மகாஜன்

சமூகத்தில் குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்தாா்.

குழந்தைத் திருமண ஒழிப்பு விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :

சமூகத்தில் குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்தாா்.

சா்வதேச குழந்தைகள் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபாா் டெவலப்மென்ட் நிறுவனம் ஆகியவை சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் குழந்தைத் திருமண ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். பின்னா் ஆட்சியா் பேசியதாவது:

ஆண்டுதோறும் நவ. 27-ஆம் தேதி சா்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைத் திருமணத்தை சட்டம், நிா்வாக நடவடிக்கைகளால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். குழந்தைத் திருமணத்துக்குத் துணை நிற்கவோ, அதில் பங்கேற்கவோ மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் குழந்தைத் திருமணத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதை முழுமையாக ஒழிக்க முடியும். கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் குழந்தைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து, இதுதொடா்பான கையெழுத்து இயக்கம், விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அனுசியா, பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபாா் டெவலப்மென்ட் நிறுவன நிறுவனா் லூசியல் ஜாய், செயல் இயக்குநா் ராஜேந்திர பிரசாத், திட்ட ஒருங்கிணைப்பாளா் பவுன்ராஜ், திட்ட மேலாளா் ராம்கி, நிறுவனப் பணியாளா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.