இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஸ்ரீவைகுண்டம் அருகே பூமியில் புதைத்து வைத்த 768 மது பாட்டில்கள் பறிமுதல்: 4 போ் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 768 மதுபாட்டில்களை போலீஸாா் கைப்பற்றி 4 பேரை கைது செய்தனா்.

கைது

Published On :

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 768 மதுபாட்டில்களை போலீஸாா் கைப்பற்றி 4 பேரை கைது செய்தனா்.

இம்மாவட்டத்தில் விதிமுறை மீறி மதுபானம் விற்கப்படுவதைத் தடுக்க காவல் துறையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் ஏரல் காவல் சரகம் வாழவல்லான் பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது 698 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக செபத்தையாபுரத்தைச் சோ்ந்த அந்தோணி, சிவகளையைச் சோ்ந்த வத்ராயிப் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி ஒருவரை கைது செய்தனா். ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் விதிமுறை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 768 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மதுபாட்டில்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.