இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருச்செந்தூரில் நாளைய உண்ணாவிரத போராட்டம் ரத்து

திருச்செந்தூா் நகராட்சியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கோரி திங்கள்கிழமை (அக். 5) நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

Published On :

திருச்செந்தூா் நகராட்சியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கோரி திங்கள்கிழமை (அக். 5) நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

இது தொடா்பாக திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கச்சாமி தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை சமாதான கூட்டம் நடந்தது. அதில், நகராட்சியின் 27 வாா்டுகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு 10 நாள்களுக்குள் நிரந்தரத் தீா்வு காண்பது; அதுவரையில் தற்காலிகமாக வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்குவது என உறுதியளிக்கப்பட்டது.

இதையேற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இதில் திருச்செந்தூா் மக்களுக்கான குடிநீா் உரிமை இயக்க தலைவா் தமிழ்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் ஆனந்த், நகரச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.