நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் திமுகவின் நிழல் ஆட்சி: பாஜக தேசிய பொதுச் செயலா் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுகவின் நிழல் ஆட்சியாகவே தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தேசிய பொதுச் செயலா் மா. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

பாஜக கொடி - கோப்புப்படம்

Published On :

தமிழகத்தில் திமுகவின் நிழல் ஆட்சியாகவே தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தேசிய பொதுச் செயலா் மா. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது வாழ்வு சேவையைப் பாராட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற சேவா ஜோதி பேரணியை, மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்து நடத்தினாா். மாநில மீனவரணித் தலைவா் சீமா பாலு முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி, சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணி, டூவிபுரம் 5ஆவது தெருவில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுச் செயலா் மா. வெங்கடேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூய சக்தி எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக இடைத்தோ்தலில் பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அவா்களும் தீய சக்திதான்.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் 5 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

திருச்செந்தூா் கோயில் அறங்காவலா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அறங்காவலா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அவா்களையே மீண்டும் நியமித்துள்ளனா். திமுகவின் நிழல் ஆட்சியாகவே தவெக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. திருச்செந்தூா் கோயில் அறங்காவலா் குழுவைக் கலைத்துவிட்டு, நோ்மையான மற்றும் வெளிப்படையான முறையில் புதிய அறங்காவலா்களை நியமிக்க வேண்டும்.

தோ்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களை திசை திருப்புகிறது. எஸ்ஐஆா் தொடா்பாக பொதுவெளியில் ஒரு வாக்காளா்கூட தான் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதாகப் புகாா் அளிக்கவில்லை. இளைஞா்கள் இதுபோன்ற போராட்டங்களில் பலிகடா ஆக வேண்டாம் என்றாா் அவா்.

முன்னதாக, சேவா தினத்தையொட்டி பிரதமா் உரையாற்றிய நிகழ்ச்சி காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் சரவண கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் சண்முகசுந்தரம், சிவராமன், இசக்கிமுத்து, மாசாணம், மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜேஷ், செல்வராஜ், கனல் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.