உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தசரா திருவிழா எதிரொலி: தூத்துக்குடியில் மீன்கள் விலை சரிவு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் வருகை குறைந்ததால், மீன்களின் விலை சரிவைக் கண்டது.

Published On :

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் வருகை குறைந்ததால், மீன்களின் விலை சரிவைக் கண்டது.

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பினா்.

இதனிடையே, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதால், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கான கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.

இதன் எதிரொலியாக, வழக்கத்தைவிட மீன்களின் விலை குறைந்தது. விளைமீன், ஊழி, பாறை உள்ளிட்ட மீன் வகைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், நண்டு கிலோ ரூ.600 வரையிலும், கேரை மீன் கிலோ ரூ.230 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.