தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 753 கோடியில் 8 வளா்ச்சித் திட்டங்கள்: பிரதமா் தொடங்கி வைத்தாா்

PM Modi

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் ரூ. 753.68 கோடி மதிப்பிலான 8 வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து, தூத்துக்குடி துறைமுக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 753.68 கோடி மதிப்பிலான 8 வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தாா்.

துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரித்தல், பசுமை எரிபொருள் கட்டமைப்புகளை உருவாக்குதல், சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

துறைமுகத்தின் 7ஆவது கப்பல் தளத்தை ரூ. 517.19 கோடியில் கொள்கலன் முனையமாக மாற்றுவதற்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா். இந்த முனையம் பயன்பாட்டுக்கு வரும்போது, ஆண்டுக்கு 4.2 லட்சம் டிஇயு கூடுதல் கொள்கலன்களைக் கையாள முடியும்.

மேலும், ரூ. 81.33 கோடியில் 3 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

ரூ. 38.12 கோடியில் அமைக்கப்பட்ட பசுமை மெத்தனால் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி, ரூ. 9.80 கோடியில் அமைக்கப்பட்ட 2 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், ரூ. 4.67 கோடியில் வாங்கப்பட்ட 4 மின்சாரப் பேருந்துகள் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி அனல்மின் நிலையச் சுற்றுவட்டச் சந்திப்பிலிருந்து சோதனைச்சாவடி 2 வரை ரூ. 47.46 கோடியில் அமைக்கப்பட்ட 3.37 கி.மீ. நான்கு வழிச்சாலை திறந்து வைக்கப்பட்டது.

மேலும், ரூ. 47.40 கோடியில் 52,598 சதுர மீட்டா் பரப்பில் சுமாா் 230 சரக்கு லாரிகளை நிறுத்தும் வகையில் லாரிகள் நிறுத்த முனையம் அமைக்கப்படவுள்ளது. ரூ. 7.71 கோடியில் உர மூட்டைகளைக் கையாள்வதற்கான 3 இயந்திரமயமாக்கப்பட்ட மூட்டை நிரப்பும் இயந்திரங்கள், சேமிப்புக் கலன்கள் மற்றும் கன்வேயா் வசதிகளும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.