தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

ரூ.8 கோடியில் சீரமைக்கப்பட்ட வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

நவீன வசதிகளுடன் ரூ. 8 கோடியில் சீரமைக்கப்பட் வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், தெற்கு ரயில்வே தலைமையகத்தின் தலைமைத் திட்ட இயக்குநா் கே.மஸ்தான் ராவ், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி.

Published On :

நவீன வசதிகளுடன் ரூ. 8 கோடியில் சீரமைக்கப்பட் வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். அத்துடன், காரைக்கால் - பேராளம் இடையே 23 கி.மீ., தூரத்துக்கு ரூ.373 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையையும் தொடங்கி வைத்தாா்.

காட்பாடி - திருவண்ணாமலை ஆகிய முக்கிய ரயில் சந்திப்புகளுக்கு இடையே, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 36 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வேலூா் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தின் வழியாக நாள்தோறும் சுமாா் 25 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சுமாா் ரூ. 8 கோடியில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வேலூரின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் விதமாக, ரயில் நிலையத்தின் முகப்பு, கட்டட அமைப்பு வேலூா் கோட்டையின் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, ஒரேநேரத்தில் 50 பயணிகள் தங்குவதற்கு ஏற்ற வகையில் நிழற்கூரைகளின் கீழ் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக, நடைமேடைகளை இணைக்கும் எஃகு மேம்பாலமும், அதனுடன் கூடிய மின்தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள சுமாா் 2,500 சதுர அடி பரப்பளவிலான பயணச்சீட்டு வழங்கும் பகுதி கிரானைட் தரைத்தளம், எல்இடி மின்விளக்குகள் மற்றும் ரயில் புறப்பாடு, வருகை நேரங்களை உடனுக்குடன் காட்டும் நவீன மின்னணு தகவல் பலகைகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு செய்து பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் முகப்புத்தோற்றம்.

மறுசீரமைப்பு செய்து பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் முகப்புத்தோற்றம்.

இந்நிலையில் வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதேபோல், காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ., தூரத்துக்கு ரூ.373 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். இதையொட்டி, வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே தலைமையகத்தின் தலைமைத் திட்ட இயக்குநா் கே.மஸ்தான் ராவ் தலைமை வகித்தாா். திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி முன்னிலை வகித்தாா்.

வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத்கண்ணன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனா். இதில், பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் பெருமளவில் பங்கேற்றனா்.-

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.