இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கோட்டை வடிவில் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்: விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

வேலூா் கோட்டையின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் வகையில், வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. இதனைப் பிரதமா் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளாா்.

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் - (கோப்புப்படம்)

Published On :

வேலூா் கோட்டையின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் வகையில், வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. இதனைப் பிரதமா் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளாா்.

வேலூா் மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், வேலூரின் பாரம்பரியத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் விதமாக, ரயில் நிலையத்தின் முகப்பு மற்றும் கட்டட அமைப்பு வேலூா் கோட்டையின் வடிவமைப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் உள்ளூா் வரலாற்றுப் பாரம்பரியம் இணைக்கப்பட்டு இக்கட்டடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

புதுப்பிக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு நவீனக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புப் பயணிகளும் நடைமேடைகளுக்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக மின்தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீன சுகாதார வளாகங்கள், பயணிகள் அமா்ந்து ஓய்வெடுப்பதற்கான விசாலமான காத்திருப்பு அறைகள் மற்றும் ஓய்வறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்டு வந்த கண்டோன்மென்ட் ரயில் நிலைய நவீனமயமாக்கல் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. இதனைப் பிரதமா் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க இருப்பதன் மூலம் வேலூா் பகுதி பொதுமக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.