‘மாற்றுத்திறனாளிகள் நலன் சாா்ந்த மாநில விருதுகளுக்கு அக். 22க்குள் விண்ணப்பிக்கலாம்’
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டுக்கான மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டுக்கான மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி, தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு விருதுக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விருதுகளுக்கு தகுதியானவா்கள் இணையதளத்தில் அக். 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்ததுடன், விண்ணப்பத்தின் 2 நகல்களை அதே நாளில் மாலை 5 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்காதவா்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியானவா்களைத் தோ்வுக் குழு தோ்வு செய்து, விருதுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

