அரியலூா்: சிறந்த கலைஞா்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள்
அரியலூரில் 15 சிறந்த கலைஞா்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் மற்றும் காசோலைகள் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டன.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட கலை மன்றம் சாா்பில் 15 சிறந்த கலைஞா்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகளை வழங்கிய ஆட்சியா் ந. மிருணாளினி.
அரியலூரில் 15 சிறந்த கலைஞா்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் மற்றும் காசோலைகள் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட கலை மன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்து, ஓவியம், பரதநாட்டியம் கலைஞா்கள் 3 பேருக்கு கலை இளமணி விருதுகளும், நாடக நடிகா், தப்பாட்டம், வாய்ப்பாட்டு கலைஞா்கள் 3 பேருக்கு கலை வளா்மணி விருதுகளும், நாகசுரம், தவில், தப்பாட்டம் கலைஞா்கள் 3 பேருக்கு கலைச் சுடா்மணி விருதுகளும், ராஜா ராணி ஆட்டம், தமுறு மேளம், கிளாரி நெட் கலைஞா்கள் 3 பேருக்கு கலை நன்மணி விருதுகளும், நாடக நடிகா், நாகசுரம், பேண்டு இசை கலைஞா்கள் 3 பேருக்கு கலை முதுமணி விருதுகளும் என மொத்தம் 15 கலைஞா்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் மற்றும் காசோலைகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில், உதவி இயக்குநா் கலைப் பண்பாட்டுத் துறை செந்தில்குமாா் மற்றும் பல்வேறு கலை பிரிவைச் சோ்ந்த கலைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

