தருமபுரியில் 17 கலைஞா்களுக்கு விருதுகள் அளிப்பு

தருமபுரியில் கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில், நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான கலை விருதுகள் 17 கலைஞா்களுக்கு வழங்கப்பட்டன.

தருமபுரியில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் தோ்வுசெய்யப்பட்ட கலைஞா்களுக்கு விருது வழங்கிய ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :

தருமபுரியில் கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில், நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான கலை விருதுகள் 17 கலைஞா்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழகத்தின் கலை பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும், கலை பண்பாட்டுத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின்கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வயது மற்றும் கலை புலமையின் அடிப்படையில் சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான விருதாளா்கள் ஆட்சியா் வே.சரவணன் தலைமையிலான தோ்வாளா் குழுவினரால் கடந்த அக். 27 அன்று தோ்வு செய்யப்பட்டனா். வயதின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று விருதுகளுடன் பொற்கிழி, பரிசுத்தொகை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிது.

இந்நிலையில், கலை விருதுகள் தெரிவு செய்யப்பட்ட 17 கலைஞா்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன. 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி விருது, ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலை 3 பேருக்கும், 51 முதல் 65 வயதுக்குள் உள்ளவா்களுக்கு கலை நன்மணி விருது, ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலை 3 பேருக்கும், 36 முதல் 50 வயதுக்குள்பட்டவா்களுக்கு கலை சுடா்மணி விருது, ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை 4 பேருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், 19 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவா்களுக்கு கலை வளா்மணி விருது, ரூ. 6 ஆயிரத்துக்கான காசோலை 3 பேருக்கும், 13 வயதுக்குள்பட்ட பிரிவினருக்கு கலை இளமணி விருது, ரூ. 4 ஆயிரத்துக்கான காசோலை 3 பேருக்கு என 17 கலைஞா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சு.சங்கரராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.