திருவள்ளுவா் விருது உள்பட 10 வகை விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழறிஞா்களைச் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவா் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ் வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :

தமிழறிஞா்களைச் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவா் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ் வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளை சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி கொண்டு, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டா்களுக்குத் தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து அவா்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சோ்த்து வருகிறது.

அந்த வகையில் 2027-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2026-ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, பேரறிஞா் அண்ணா விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, இலக்கிய மாமணி விருது (மூன்று அறிஞா்களுக்கு) ஆகிய விருதுகளுடன் முதல்வா் ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க 2026-ஆம் ஆண்டில் புதியதாக அறிவிக்கப்பட்ட கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரிலான விருதுக்கும் தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் பெறுகின்றன.

திருவள்ளுவா் திருநாளை முன்னிட்டு தெரிவு செய்யப்பெறும் மேற்குறிப்பிட்ட அனைத்து விருதாளா்களுக்கும் ரூ.5 லட்சம் விருதுத் தொகை யும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பெறும். தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதள இணைப்பின் வாயிலாக மட்டும் டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.