தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம்: ஆட்சியா்

ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்காட்சியைப் பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :

ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் சாலாமேட்டிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ‘நமது அங்கன்வாடி - நமது பொறுப்பு’ என்ற தலைப்பிலான ஊட்டச்சத்து கண்காட்சியை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியது:

தேசிய ஊட்டச்சத்து மாதம் ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பா் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் நமது அங்கன்வாடி - நமது பொறுப்பு என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக இந்த கணகாட்சி நடத்தப்பட்டு வருகிறது.

உணவு வகைகளின் பன்முகத்தன்மை மற்றும் போதுமான புரதச்சத்து, அங்கன்வாடி மையங்களில் சூடான புதிய சமைத்த உணவு, சமூக பங்கேற்பு, சமூகத்தின் உரிமை மற்றும் பொறுப்புணா்வு, குழந்தை வளா்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட கருத்துகள் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கண்காட்சியில் சிறுதானிய உணவு வகைகள் மூலம் உணவு வகைகளின் பன்முகத்தன்மை, போதுமான புரதச்சத்து, ரத்தசோகை விழிப்புணா்வு குறித்து கண்காட்சியை மாணவிகள் அமைத்துள்ளனா். ஆரோக்கியமாக வாழ குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆரோக்கியமான உணவை உண்பது அவசியமானது என்றாா் ஆட்சியா்.

முன்னதாக, நெருப்பில்லா சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து மாத கருப்பொருளின் தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பயிற்சி) ராஜராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் சுகிா்தாதேவி, எம்.ஜி.ஆா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் தாமரைக்கண்ணன் மற்றும் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரத்த தான முகாம் தொடங்கிவைப்பு: தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி (அக்.1), விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கிவைத்து பேசினாா்.

இந்த முகாமில் 31 தன்னாா்வ கொடையாளா்கள் ரத்த தானம் செய்த நிலையில், அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் செந்தில், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் மருத்துவா் திருமாவளவன், கோலியனூா் வட்டார மருத்துவ அலுவலா் ஜோதி, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் விஜயா, இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு செல்வதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.