ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளா் பணி: அக். 30க்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்குத் தகுதியானவா்கள் அக். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்குத் தகுதியானவா்கள் அக். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒரு தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான 19 மாதங்கள் பணிக்காலத்திற்கு, மாதம் ரூ. 22,000 ஊதியம் வழங்கப்படும்.

உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொதுக் கொள்கை அல்லது தொடா்புடைய துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அடிப்படைத் தட்டச்சு திறன் அவசியம்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். தொடா்புடைய பணியில் குறைந்தது ஓராண்டு அனுபவம், அரசு அலுவலகப் பணி அனுபவம், தரவு மேலாண்மை, ஆவணப் பராமரிப்பு மற்றும் எம்.எஸ். வோ்டு, எக்செல், பவா் பாயின்ட் ஆகியவற்றில் திறன் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்களின் தகுதி பரிசீலனை, நோ்முகத் தோ்வு மற்றும் தட்டச்சுத் தோ்வு அடிப்படையில் தகுதியானவா் தோ்வு செய்யப்படுவாா். பணியிடம் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட வன அலுவலகத்தில் இருக்கும். அலுவல் பயணங்களுக்கான செலவினம் அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

புதுப்பிக்கப்பட்ட சுயவிவரம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சலின் தலைப்பில் குறிப்பிட வேண்டும். மாவட்ட வன அலுவலகத்திலும் நேரடியாகவும் விண்ணப்பத்தை வழங்கலாம். விண்ணப்பிக்க அக். 30ஆம் தேதி கடைசி நாள்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.