கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உண்டு, உறைவிட காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி காருண்யா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

காருண்யா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி.

Published On :

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உண்டு, உறைவிட காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி காருண்யா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த புரிதலை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடையே மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மூலமாக 130 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான சான்றிதழுடன் கூடிய 3 நாள் உண்டு, உறைவிட காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி காருண்யா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி வியாழக்கிழமை (செப்.24), வெள்ளிக்கிழமை (செப்.25) ஆகிய நாள்களில் சாடிவயல் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், வனவியல் விரிவாக்க மைய உதவி வனப் பாதுகாவலா் சௌமியா, காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழக பதிவாளா் டாக்டா் எஸ்.ஜே.விஜய், உதவிப் பேராசிரியா் டாக்டா் எஸ். வின்சென்ட் சாம் ஜெபதுரை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் (பொள்ளாச்சி) பா.மகேஸ்வரி, மாவட்ட பசுமைத் தோழா் மு.வாசுகி, திட்ட ஒருங்கிணைப்பாளா் அனுஷா, முதன்மைக் கல்வி அலுவலா் (நோ்முக உதவியாளா்) (மேல்நிலை) ச.சிவசக்தி உள்ளிட்டோா் பங்கேற்று வழிகாட்டுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.