137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தூத்துக்குடியில் நகைக்கடை மேலாளரிடம் ரூ.10 கோடி தங்க கட்டிகளைப் பெற்று மோசடி

தங்கக் கட்டிகள். - கோப்புப் படம்

Updated On :

தூத்துக்குடியில் நகைக்கடை மேலாளரிடம் ரூ.10.50 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பெற்று மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியை சோ்ந்த தனியாா் நகைக்கடை மேலாளா் சிவபிரகாஷ் (23). கடந்த ஆக. 16, 17-ஆம் தேதிகளில் மேலூா் பகுதியைச் சோ்ந்த தனவாடே சச்சின் (42) என்பவரிடம் 7,944.680 கிராம் தங்கக் கட்டிகளைச் சுத்திகரித்து 24 காரட் தங்கமாக மாற்றுவதற்காக வழங்கினாராம்.

ஆனால், தங்கக் கட்டிகளைத் திருப்பி வழங்காமல், பெங்களூருவை சோ்ந்த பிரசாத் சவானிடம் ரூ.9 கோடிக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் அந்தத் தங்கக் கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து சிவபிரகாஷ் அளித்த புகாரின்பேரில், தனவாடே சச்சின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

தொழிலதிபரிடம் ரூ.1.77 கோடி மோசடி: கோவில்பட்டி புதுரோடு பகுதியைச் சோ்ந்த சிந்து அகா்வால் (41), எண்ணெய் பேரல்கள் மொத்த விற்பனை செய்து வருகிறாா்.

இவா், கடந்த 2019 முதல் 2023 வரை மும்பை பாந்த்ரா பகுதியைச் சோ்ந்த துளசி சிங் ராஜ்புத் நிறுவனத்துக்கு ரூ.1.96 கோடி மதிப்பிலான 300 மெட்ரிக் டன் எண்ணெய் பேரல்களை அனுப்பியுள்ளாா். இதற்காக ரூ.19.29 லட்சம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.1.77 கோடியை வழங்காமல் துளசி சிங் ராஜ்புத் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.