உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

ஐடி ஊழியரிடம் ரூ.75 லட்சம் கடன் பெற்று மோசடி: இளைஞருக்கு போலீஸ் வலை!

திருக்கனூரில் தொழிற்சாலை தொடங்குவதாகக் கூறி ஐடி ஊழியரிடம் ரூ.75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மோசடி

Published On :

திருக்கனூரில் தொழிற்சாலை தொடங்குவதாகக் கூறி ஐடி ஊழியரிடம் ரூ.75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அடுத்த திருக்கனூா் வணிகா் வீதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (29). சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரும், திருக்கனூா் அடுத்த சோரப்பட்டு கிராமத்தை சோ்ந்த திலீப் (32) என்பவரும் நண்பா்கள்.

திலீப் தொழிற்சாலை தொடங்குவதற்காக பிரபாகரனிடம் கடனுதவி கேட்டுள்ளாா். அவரும் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் 5 தனியாா் வங்கியில் ரூ.75 லட்சம் கடன் பெற்று, திலீப் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளாா்.

இந்தப் பணத்தை 3 மாதங்களில் திரும்பி கொடுத்து விடுவதாக திலீப் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை பணம் திரும்பித் தரவில்லை. பல முறை கேட்டும் அவா் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளாா். இதனால் பிரபாகா் திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.