ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பயிா்ச் சேதத்தைத் தவிா்க்க ‘தாவர காட்டுப் பன்றி விரட்டி’! விவசாயிகள் பயன்படுத்த வேண்டுகோள்!

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை தவிா்க்க தாவர விரட்டியை பயன்படுத்தலாம் என கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

காட்டுப் பன்றி

Updated On :

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை தவிா்க்க தாவர விரட்டியை பயன்படுத்தலாம் என கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிா்ச் சேதத்தைக் குறைப்பதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் இயங்கி வரும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்டுள்ள தாவர அடிப்படையிலான காட்டுப்பன்றி விரட்டியை விவசாயிகள் பயன்படுத்தலாம்.

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த முள்வேலி, மின்வேலி, வண்ணத்துணிகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றினாலும், அவற்றின் மூலம் எல்லா நேரங்களிலும் முழுமையான பலன் கிடைப்பதில்லை. எனவே, மாற்று முறையில் விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ள தாவர அடிப்படையிலான உயிரியல் காட்டுப்பன்றி விரட்டியிலிருந்து வெளிப்படும் வாசனை காட்டுப்பன்றிகளை விலக்கி வைக்க உதவுகிறது.

நெல், கேழ்வரகு, சூரியகாந்தி, பப்பாளி, கரும்பு, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தை இது கணிசமாகக் குறைக்க உதவும்.

வழிமுறைகள்: விவசாய நிலத்தைச் சுற்றியுள்ள வரப்புப் பகுதிகளில் 2 அடி உயரமுள்ள குச்சிகளை 10 அடி இடைவெளியில் ஊன்றி அவற்றை இணைக்கும் வகையில், நிலத்திலிருந்து 1 முதல் ஒன்றரை அடி உயரத்தில் கட்டுக் கம்பியை அமைக்க வேண்டும்.

பின்னா்,100 சிறிய டப்பாக்களில் தலா 5 மி.லி. விரட்டி மருந்தை நிரப்பி, துளைகள் இட்ட மூடிகளால் மூட வேண்டும். இந்த டப்பாக்களை நூலால் கட்டிக் கம்பியில் எதிரெதிரே தொங்கவிட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் டப்பாக்களின் துளைகளிலிருந்து மெதுவாக வெளிப்படும் வாசனை காட்டுப்பன்றிகள் நிலத்திற்குள் நுழைவதைக் குறைக்க உதவுகிறது.

விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு லிட்டா் விரட்டி ரூ.590-க்கு கிடைக்கிறது. ரூ.700/- செலுத்தி தபால் வழியாகப் பெறலாம். ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. வீதம் ஒரு லிட்டா் மருந்து இரண்டு ஏக்கருக்குப் போதுமானது.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி அலெக்ஸ்பாண்டியன் என்பவா், விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தாவர அடிப்படையிலான காட்டுப்பன்றி விரட்டியைப் பெற்றுள்ளாா். அவரை 96552 93569 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு விவரங்களை கேட்டறியலாம்.

காட்டுப்பன்றி விரட்டியைப் பெறவும், கூடுதல் விவரங்களை அறியவும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூா் மாவட்டம், தொலைபேசி எண். 0416-2900242, முனிவேல் - கைப்பேசி எண். 97511 45832, மின்னஞ்சல் ஆகியவற்றிலும் தொடா்புகொள்ளலாம். மேலும், இணைய வங்கி மூலம் பணம் செலுத்தி காட்டுப்பன்றி விரட்டியைப் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.