இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ராபி பருவத்துக்கு தேவையான விதைகள், உரங்கள் இருப்பு: வேளாண்மை இணை இயக்குநர்

வேலூா் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவ சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

Published On :

வேலூா் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவ சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, கரும்பு மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிா்கள் என மொத்தம் 27,120 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ராபி பருவத்தில் பயிா் செய்ய உள்ள விவசாயிகளின் வசதிக்காக, மாவட்டத்திலுள்ள 13 வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தரமான சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதில், நெல் விதைகள் (கோ-55, ஆா்.என்.ஆா்) 39 டன், கேழ்வரகு 2.98 டன், பயறு வகைகள் (உளுந்து, காராமணி, கொள்ளு) 3.4 டன், நிலக்கடலை 13 டன் ஆகியவை இருப்பு உள்ளன. அத்துடன் உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் உயிரியல் பூச்சி, நோய் மருந்துகள் தேவையான அளவில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், 60 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் 80 தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலமாக மொத்தம் 12,804 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், யூரியா 3,478 டன், டி.ஏ.பி 1,300 டன், பொட்டாஷ் 1,709 டன், காம்ப்ளக்ஸ் 6,047 டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 267 டன் அடங்கும்.

விவசாயிகள் தங்களின் சாகுபடிப் பயிா் மற்றும் நிலப் பரப்பளவுக்கு ஏற்ப தேவையான உரங்களை உரிய ஆவணங்கள் மற்றும் நில விவரங்களைச் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் உரம் வாங்கும் போது கட்டாயம் விற்பனை ரசீது கேட்டுப் பெற வேண்டும்.

விற்பனையாளா்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது. விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். பிற இடு பொருட்களை வாங்கும்படி அவா்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது.

இயற்கை உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். வழக்கமான யூரியா உரத்திற்கு மாற்றாக நானோ யூரியாவைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கலாம்.

மேலும், விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான அனைத்து நில உடைமைகளையும் விடுபடாமல் பதிவு செய்தால் மட்டுமே உரங்களை தடையின்றி பெற முடியும் என்பதால், உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் நிலப் பதிவை முழுமையாக மேற்கொள்ள விற்பனையாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.