தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

காதல் தகராறில் சிறுமியின் தாய் கொலை: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே காதல் தகராறில் சிறுமியின் வீடு புகுந்து அவரது தாயைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமியின் தந்தை, சகோதரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்த மேரி ரெஜிலா,

Updated On :

சாத்தான்குளம் அருகே காதல் தகராறில் சிறுமியின் வீடு புகுந்து அவரது தாயைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமியின் தந்தை, சகோதரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூா், கமலம் நகரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (43). இவரது மனைவி மேரி விஜிலா (39). இத்தம்பதிக்கு 15, 14 வயதுகளில் இரு மகள்களும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனா்.

மூத்த மகள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சாத்தான்குளத்தில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறாா். இவரும் அதே பகுதியில் வேறொரு கடையில் வேலை செய்யும் ஆனந்தபுரம் ஞானபிரகாஷும் (23) இரண்டு ஆண்டுகளாக பழகி வந்தனராம்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா் மகளைக் கண்டித்தனா். இதனால், அந்தச் சிறுமி கடந்த 10 நாள்களாக ஞானபிரகாஷிடம் பேசவில்லை. ஆவேசமடைந்த ஞானபிரகாஷ் சிறுமியின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துவந்தாா்.

இந்த நிலையில், ஞானபிரகாஷ் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் சிறுமியின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று அவரது தாய் மேரி விஜிலாவை வெட்டினாா்; தடுக்க வந்த முத்துகிருஷ்ணன், அவரது மகனுக்கும் வெட்டு விழுந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேரி விஜிலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் தட்டாா்மடம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று

சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். காயமடைந்த முத்துகிருஷ்ணன், அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சிறுமிகள் கடத்தல்: முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய ஞானபிரகாஷ் வீட்டில் இருந்த இரு சிறுமிகளையும் அரிவாள் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று தனது வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் காயமடைந்த இரு சிறுமிகளையும் மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

டிஐஜி, எஸ்.பி. நேரில் ஆய்வு: சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் ஆகியோா் கமலம் நகருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். தலைமறைவான ஞானபிரகாஷை சாத்தான்குளம் அருகே பனைக்குளத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.