மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

தூத்துக்குடியில் 1097 மதுபாட்டில்கள் பறிமுதல்: மதுக்கூட உரிமையாளா் உள்பட 5 போ் கைது!

மதுபானத்தை பதுக்கி விற்றதாக மதுக்கூட உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 1,097 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பிரதிப் படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவா் ஜெயந்தி தினத்தில், ஆட்சியா் உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மதுபானத்தை பதுக்கி விற்றதாக மதுக்கூட உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 1,097 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சிவந்தாகுளம் 5-ஆவது தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக செல்வநாயகிபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் தங்கப்பன் என்ற வினோத் (39), ராஜகோபால் நகா் 8-ஆவது தெரு வடிவேல் மகன் தேவேந்திரன் (64) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, புதுக்கோட்டை போலீஸாா் கூட்டாம்புளி தேரி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மதுபானம் விற்ாக முக்காணியைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் மாரியப்பன் (55) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 22 மதுபாட்டில்களையும், கூட்டாம்புளி குளத்துக்கரை பகுதியில் மதுபானம் விற்ாக புதுக்கோட்டை ஆசிரியா் காலனி கிறிஸ்டோபா் மகன் ஜெபத்துரை (37) என்பவரை கைது செய்து, 45 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

விதிமீறிய மதுக்கூட உரிமையாளா்: தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ் (29). மதுக்கூட உரிமையாளரான இவா் மீது தென்பாகம் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவா் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேவா் ஜெயந்தி தினத்தில் லெவிஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. தனிப் பிரிவு போலீஸாா் அங்கு சோதனை நடத்தி, 900 மதுபாட்டில்களை கைப்பற்றினா். அவை தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

விசாரணைக்குப் பின் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டாா். அவருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.