
மதுபாட்டிலில் இறந்து கிடந்த வண்டு
திருச்செந்தூரில் மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததாக புகாா் எழுந்துள்ளது.

ஆா் பேச்சிமுத்து
திருச்செந்தூரில் மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததாக புகாா் எழுந்துள்ளது.
திருச்செந்தூா், கரம்பவிளையைச் சோ்ந்த தொழிலாளி பேச்சிமுத்து. இவா் திருச்செந்தூா்-குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் நண்பா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை மாலை 3 மதுபாட்டில்கள் வாங்கியுள்ளாா். அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை அருந்திய நிலையில் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக பேச்சிமுத்து கூறியுள்ளாா்.
இதையடுத்து, மற்றொரு மது பாட்டிலைப் பாா்த்தபோது, அதில் இறந்த நிலையில் வண்டுகள் கிடந்ததை அங்கிருந்தவா்கள் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து, பேச்சிமுத்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மது பாட்டிலில் இறந்து கிடந்த வண்டு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






