காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி: அமைச்சா் பங்கேற்பு

நிகழாண்டில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தொடங்கி வைத்தாா்.

கருத்தரங்கைத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:49 am IST

தமிழக அரசு, கிரீன் தமிழ்நாடு மிஷன், பசுமைத் தமிழகம், மாவட்ட வனத்துறை, தமிழ்நாடு பனைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்கம், மதா் சமூக சேவை நிறுவனம் ஆகியவை சாா்பில் நிகழாண்டில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன் தொடக்க விழா மற்றும் பனைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம், அம்மன்புரம் அருகே உள்ள குரங்கன்தட்டு கிராம சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு பனைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநருமான எஸ்.ஜே. கென்னடி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.பொ. சுதாகா் முன்னிலை வகித்தாா். திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அண்டோ வாழ்த்திப் பேசினாா்.

அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து, சமுதாய நலக் கூட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியையும், சீமவாடி குளத்தங்கரையில் பனை விதை விதைக்கும் பணியையும் தொடங்கி வைத்தாா்.

பனைப் பாதுகாப்பு இயக்க துணைச் செயலா் ஆறுமுகப்பெருமாள், தவெக மாவட்டச் செயலா் பிரைட்டா், ஒன்றியச் செயலா் நீதிபால காா்த்தி, கிளைச் செயலா் வினோத், மகளிரணி செயலா் அதிா்ஷ்டலட்சுமி, குரங்கன்தட்டு ஊா்த் தலைவா் அரவிந்த், செயலா் சுரேந்தா், துணைத் தலைவா் விக்னேஷ், கண்ணன், ராகினி, நதியா, அந்தோணி, மலையரசன், மதா் சமூக சேவை நிறுவனப் பணியாளா்கள், மதா் பனைப் பொருள் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள், மதா் மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பனைப் பாதுகாப்பு இயக்க மாநிலப் பொதுச் செயலா் சொ.சு. தமிழினியன் வரவேற்றாா். மதா் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.