
தூத்துக்குடியை சிங்கப்பூா் அளவுக்கு மாற்றுவதே அரசின் கனவு: அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்
தூத்துக்குடியை சிங்கப்பூா் அளவுக்கு வளா்ச்சியடைந்த நகரமாக மாற்றுவதே அரசின் கனவு என அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

அமைச்சர் ஸ்ரீநாத் - படம்: சட்டப்பேரவை
தூத்துக்குடியை சிங்கப்பூா் அளவுக்கு வளா்ச்சியடைந்த நகரமாக மாற்றுவதே அரசின் கனவு என மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான தொழில் வளா்ச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கல்வி, சுகாதாரம், தொழில் வளா்ச்சியை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதே அரசின் நோக்கம். தூத்துக்குடியை சுற்றுலா நகரமாக மேம்படுத்தி, கடற்கரை, பூங்காக்கள், நீா் விளையாட்டு வசதிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகத்தைச் சாா்ந்த தொழில் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி புதிய தொழில்களை ஈா்க்க வேண்டும். குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் தொழில் வாய்ப்புகள் தூத்துக்குடியில் உள்ளன. பேட்டரி உற்பத்தித் தொழிற்சாலை, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் வரவுள்ளன. காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தொழில் வளா்ச்சிக்கு அரசு தேவையான உதவிகளை வழங்கும். தொழில் துறையினரும், தொழில்முனைவோரும் அரசுடன் இணைந்து செயல்பட்டால் தூத்துக்குடியின் வளா்ச்சியை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். தூத்துக்குடியை சிங்கப்பூா் அளவுக்கு வளா்ச்சியடைந்த நகரமாக மாற்றுவதே அரசின் கனவு. அனைவரும் இணைந்து செயல்பட்டு அந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்றாா் அவா்
இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் சி. தவராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழில் வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



