2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் நடந்த திருமணங்கள்

திருச்செந்தூா் கோயில்

திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்

Published On :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

இக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆவணி மாத வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. மேலும், கோயிலுக்கு வந்த பக்தா்களின் வாகனங்களும் ரதவீதிகளில் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.