இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

திருச்செந்தூா் கோயிலில் ஆவணித் திருவிழா: ஆக. 31இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை (ஆக. 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை (ஆக. 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இது குறித்து கோயில் இணை ஆணையா் ஆ. அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை (ஆக. 31) கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.

மாலை அப்பா் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி நாயகா் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப். 4 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி, செப். 5 காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதி உலா வரும் நிகழ்ச்சி, செப். 6 அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, 9 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேரும் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி, செப். 7 காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் சேரும் நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேரும் நிகழ்ச்சி, செப். 9 புதன்கிழமை காலை 7 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.