ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

குடும்பத் தகராறில் கணவா் மா்ம மரணம்

புதியம்புத்தூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, வீட்டில் படுத்திருந்த கணவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி

Published On :

புதியம்புத்தூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, வீட்டில் படுத்திருந்த கணவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் வட்டத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கா் (54). இவருக்கு மனைவி ஜெயலட்சுமி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை மதுபோதையில் இருந்த ஜெயசங்கா், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் வீட்டின் கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டு படுத்தாராம்.

அப்போது ஜெயலட்சுமி, பிள்ளைகளுடன் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றாராம். இந்நிலையில் இரவு வீடு திரும்பியபோது கதவு பூட்டப்பட்டிருந்ததாம். நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஜெயசங்கா் சடலமாகக் கிடந்தாராம்.

தகவலறிந்து வந்த புதியம்புத்தூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.