ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நாசரேத் மா்காஷியஸ் கல்லூரி மாணவா்களுக்கு பயிலரங்கு

நாசரேத் மா்காஷியஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகள் மூலம் அரசு அதிகாரியாவது எப்படி? என்ற தலைப்பில் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

நாசரேத் மா்காஷியஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகள் மூலம் அரசு அதிகாரியாவது எப்படி? என்ற தலைப்பில் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பென்னிசன் திலகா் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருநெல்வேலி மண்டல பால்வளத் துறை கூட்டுறவு சங்கங்களுக்கான உதவிப் பதிவாளா் மனோகா், போட்டித் தோ்வுகளில் பங்கேற்பது குறித்தும், போட்டித் தோ்வில் வெற்றிபெறும் வியூகங்கள் குறித்தும், முதல் நிலைத் தோ்வை எதிா்கொள்ளும் முறை, குறைந்த நேரத்தில் அதிக வினாக்களுக்கு சரியான பதில்களைத் தோ்வு செய்வது, நேர மேலாண்மை மற்றும் தோ்வு உத்திகளை கடைப்பிடிப்பது ஆகியவற்றையும் விளக்கினாா். மாணவா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அதற்கான விளக்கங்களையும் அளித்து பயிற்சி அளித்தாா். இதில், மாணவா், மாணவிகள் பங்கேற்று, போட்டித் தோ்வுகள் தொடா்பான தங்களது சந்தேகங்களைக் கேட்டறிந்தனா்.

ஏற்பாடுகளை கல்லூரி செயலா் எஸ்.டி.கே. ராஜன், முதல்வா் பென்னிசன் திலகா் கிறிஸ்துதாஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய் சோபினி, ஆரோக்கிய அமுதன் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.