ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

குரும்பூா் அருகே ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கத்திக்குத்து

கொலை... - சித்திரிப்பு

Published On :

குரும்பூா் அருகே ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூா், முஸ்­லிம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் நூா்தீன் மகன் தமீம் அன்சாரி(46). ஆட்டோ ஓட்டுநரான இவா், குரும்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இதே ஸ்டாண்டில் வீரமாணிக்கம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கத்துரை மகன் சங்கரமூா்த்தியும் (44) ஆட்டோ ஓட்டி வருகிறாா்.

சங்கரமூா்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியாா் வங்கியில் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வியாழக்கிழமை வந்த தனியாா் வங்கி மேலாளா், தமீம் அன்சாரியிடம் சங்கரமூா்த்தி ஆட்டோவைப் பற்றி கேட்டாராம்.

அவா் அங்கு நின்ற ஆட்டோவை காண்பித்தாராம். அப்போது அங்கு வந்த சங்கரமூா்த்தி வங்கி மேலாளரிடம் தன்னை காட்டி கொடுத்த ஆத்திரத்தில் தமீம் அன்சாரியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

பலத்த காயமடைந்த தமீம் அன்சாரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, குரும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரமூா்த்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.