கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

குலசை தசரா திருவிழாவில் பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள்: கோட்டாட்சியா் உறுதி

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் பக்தா்கள், தசரா குழுக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என, அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய திருச்செந்தூா் கோட்டாட்சியா் கவுதம்.

Published On :

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் பக்தா்கள், தசரா குழுக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என, அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

பல லட்சம் பக்தா்கள் பங்கேற்கும் தசரா திருவிழா அக். 11இல் தொடங்கி அக். 20இல் சூரசம்ஹாரம், அக். 21இல் காப்பு களைதல், கொடியிறக்கத்துடன் நிறைவடையும். இந்நிலையில், தசரா குழுக்கள், உள்ளூா் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பாதுகாப்புகள், அடிப்படைத் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் கவுதம் தலைமை வகித்தாா். டிஎஸ்பி மகேஷ்குமாா், கோயில் செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா், உதவி ஆய்வாளா் முகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில், பாரத மாதா நண்பா்கள் அன்னதானக் குழு நிறுவனா் ஆா்.எஸ். பாண்டியன், சமூக ஆா்வலா் குணசீலன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், தசரா குழுக்களின் நிா்வாகிகள், உள்ளூா் மக்கள் பங்கேற்றனா். அவா்கள் பேசும்போது, தசரா திருவிழாவுக்கு கடந்த ஆண்டைவிட கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சூரம்ஹாரத்துக்கு அடுத்த நாள் பக்தா்கள் காப்பு அவிழ்த்து வேடங்களைக் களைய வேண்டியுள்ளதால், உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும். விழா நாள்களில் அரசு மதுக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.

அதற்குப் பதிலளித்து கோட்டாட்சியா் பேசியதாவது: அனைத்துக் கோரிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டைவிட கூடுதலாக 50 ஏக்கா் நிலங்களை சீரமைத்து தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும்.

பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸாா் ஈடுபடுவா். திருவிழாவில் பங்கேற்போரின் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஜாதிச் சின்னம், கொடிகள் பொறித்த ஆடைகள் அணிந்துவரவோ, இரும்பு ஆயுதங்கள் கொண்டுவரவோ அனுமதியில்லை.

மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தசரா குழுக்கள் அமைக்கப்படும் ஊா்களிலும் ஜாதி அடையாளங்கள் கூடாது. திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்துத் தரப்பினரும் ஆலோசனை தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், வணிகா்கள் முன்னேற்றச் சங்கத் தலைவா் அம்புரோஸ், 100-க்கும் மேற்பட்ட தசரா குழுவினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.