கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மாநில கிரிக்கெட் போட்டிக்கு சாகுபுரம் பள்ளி மாணவிகள் தகுதி

ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல்வா் கோப்பை மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற கமலாவதி பள்ளி மாணவிகளுடன், பள்ளி நிா்வாகிகள்.

Published On :

ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல்வா் கோப்பை மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே மாணவிகள் கிரிக்கெட் போட்டி, தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் கமலாவதி பள்ளி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில், தூத்துக்குடி ஹோ­லிகிராஸ் பள்ளி அணியை வென்று, மாவட்ட அளவில் முத­லிடம் பெற்றது.

இதன் மூலம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா். மாவட்ட அளவில் முத­லிடம் பெற்ற மாணவிகள் பரிசு கோப்பை மற்றும் ரூ. 45,000 பரிசுத் தொகை பெற்றனா்.

மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்களான செல்வம், மணிகண்டன், அழகு காா்த்திக் சங்கா் ஆகியோரையும் பள்ளி அறங்காவலரும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி. ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாக அதிகாரி வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் பி. ராம் பிரபு, தலைமையாசிரியை வி. இந்திரா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.