பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே தகராறு: அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Published On :

திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்செந்தூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தமுருகன் (51). இவா், கோயில் வாசல் பகுதியில் உள்ள மணி ஐயா் நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இதேபோல ஆறுமுகனேரி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மாதவன் தினேஷ் (26), திருச்செந்தூா் அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறாா்.

இவா், சனிக்கிழமை பகலில் பயணிகளை கோயில் அருகே இறக்கிவிட்டு, அங்கிருந்த மற்ற பயணிகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது கோயில் வாசலில் ஆட்டோ நிறுத்தும் ஓட்டுநா்கள், மாதவன் தினேஷை கண்டித்தனராம். இதில், ஆனந்தமுருகனுக்கும், மாதவன்தினேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் மீண்டும், இரவு நேரத்தில் கோயில் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்த மற்ற பயணிகளை ஏற்றிச் செல்ல மாதவன் தினேஷ் முயன்றாராம். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆனந்தமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், மாதவன் தினேஷை வெட்டினாராம். அதே அரிவாளை கைப்பற்றி மாதவன் தினேஷ், ஆனந்தமுருகனை வெட்டினாராம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்து வந்த திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி மருத்துவமனை முன் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.