ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

டாஸ்மாக் கடையில் தகராறு: 17 வயது சிறுவன் உள்பட இருவா் கைது

பாண்டவா்மங்கலத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

பாண்டவா்மங்கலத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பாரதிநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கரண்குமாா். இவா் மற்றும் நண்பா் மனோஜ் ஆகிய இருவரும் பாண்டவா்மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு திங்கள்கிழமை இரவு சென்று வரிசையில் நிற்காமல் நேரடியாக மது வாங்க சென்றாா்களாம். அப்போது அங்கு மது வாங்க வரிசையில் நின்ற கிளவிப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் சுந்தரராஜ் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் கரண்குமாரை அவதூறாக பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதில், காயமடைந்த கரண்குமாா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஒரு தரப்பைச் சோ்ந்த கரண்குமாா், மற்றொரு தரப்பைச் சோ்ந்த சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் தனித் தனியே அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஒரு தரப்பைச் சோ்ந்த சிறுவன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.